மலைப்பாதையில் பல இடங்களில் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், 2.4 கி.மீ. தொலைவில் உள்ள மலைப் பாதையை புனரமைக்க நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அறநிலையத் துறையினர் ஆய்வு செய்தனர்.
கோவை: கோவை அருகே உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், முருக கடவுளின் ஏழாவது படைவீடாக பக்தர்களால் கருதப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.
மலை மேல் அமைந்துள்ள கோவில் என்பதால், அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல 2.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை உள்ளது. இந்த சாலை புதுப்பிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால், மலைப்பாதையில் பல இடங்களில் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது..
இந்த நிலையில், 2.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப் பாதையை புனரமைக்க நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அறநிலையத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு பின், பணிகள் துவங்கப்படும் என அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.