பசுமை தமிழ்நாடு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு..!

இத்திட்டம்‌ மண்‌ வளத்தை மீட்டெடுப்பதற்கும்‌, மாநிலத்தில் செழிப்பையும்‌, நல்வாழ்வையும்‌ அதிகரிப்பதற்கு மிகவும்‌ அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.


கோவை: தமிழ்நாட்டின்‌ பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக 'பசுமை தமிழ்நாடு' (Green TN Mission) என்னும்‌ திட்டத்தை தொடங்கி அதற்கு நிதுஊ ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்‌.

இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள பதிவில்‌, #காவேரி கூக்குரல் இயக்கம்

#பசுமைதமிழ்நாடு திட்டத்திற்கு தனது மனமார்ந்த ஆதரவை தெரிவித்து கொள்கிறது. இத்திட்டம்‌ மண்‌ வளத்தை மீட்டெடுப்பதற்கும்‌, மாநிலத்தில்‌ செழிப்பையும்‌, நல்வாழ்வையும்‌ அதிகரிப்பதற்கும்‌ மிகவும்‌ அவசியம். தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்கள்‌ என தெரிவித்துள்ளார்‌.

இந்த இட்டத்தின்‌ மூலம்‌ தமிழ்நாடு அரசு அடுத்த 10 ஆண்டுகளில்‌ 265 கோடி மரங்களை தமிழ்நாட்டில்‌ நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, அடுத்த 2 ஆண்டுகளில்‌ 1.77 கோடி மரக்கன்றுகளை உருவாக்க ரூ.38.80 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.



இதேபோன்ற நோக்கத்துடன்‌ தான்‌, சத்குரு அவர்களும்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்‌. அவ்வியக்கத்தின்‌ மூலம்‌ தமிழ்நாடு மற்றும்‌ கர்நாடகாவில்‌ காவிரி படுகையில்‌ அமைந்துள்ள விவசாய நிலங்களில்‌ 12 ஆண்டுகளில்‌ 242 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, 2020, 2021-ம்‌ ஆண்டுகளில்‌ மொத்தம்‌ 2.1 கோடி மரக்கன்றுகள்‌ விவசாய நிலங்களில்‌ நடப்பட்டுள்ளது. 2022-ம்‌ ஆண்டு 3.5 கோடி மரக்கன்றுகள்‌ நட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வியக்கத்தின்‌ மூலம்‌, சுற்றுச்சூழல்‌ மேம்பாடு மட்டுமின்றி விவசாயிகளின்‌ பொருளாதாரத்தையும்‌ ஒருசேர அதிகரிக்கும்‌ விதமாக பணமதிப்பு மிக்க மண்ணுக்கேற்ற மரங்கள்‌ நடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்‌, காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ நோக்கத்தை விரைந்து செயல்படுத்தும்‌ விதமாக தமிழ்நாடு அரசு பசுமை தமிழ்நாடு திட்டத்தை அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...