டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை; கோவையில் முதியோர் இல்லங்களில் தீவிர கண்காணிப்பு..!

கோவையில் உள்ள 30 முதியோர் இல்லங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


கோவை: கோவையில் டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதியோர் இல்லங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள முதியோர் இல்லங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதிகாரிகள் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 30 முதியோர் இல்லங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லங்களில் 1200க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கியுள்ளனர்.

மகன், மகள், உறவினர்கள் போன்றவர்களால் கைவிடப்பட்டவர்களும், தனிமையில் வசித்தவர்களும் என ஆதரவற்ற முதியோர்கள்தான் இந்த இல்லங்களில் உள்ளனர்.

இவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்தும், தங்க இடம் மற்றும் உணவுகள் ஆகியவை தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதியோர்களை கண்காணிக்கும் விதமாக மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள 30 முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு வெப்ப அளவு பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘முதியோர் இல்லங்களுக்கு நேரடியாக சென்று முதியோர்களிடம் விழிப்புணர்வை அளித்து வருகிறோம். காய்ச்சல், சளி இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், முதியோர் இல்ல ஊழியர்களிடம் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். மழை நீர் கட்டிடங்கள் மேல் உள்ளதா? என கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து முதியோர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்’’ என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...