மேலும், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனுடன் சேர்த்து டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதனிடையே, மாவட்டத்தில் சுமார் 27 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனாவுடன் சேர்த்து டெங்கு தடுப்பு பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள சுகாதார துறையினருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் கொரோனா பணிகளுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளையும் தீவிரப்படுத்த அரசு துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா மட்டுமின்றி டெங்கு பாதிப்பும் உள்ளதா? என்பது கண்டறியப்படும். மேலும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு மாடிகளிலும், வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகள், குடிநீர் டிரம்கள் போன்றவற்றை அடிக்கடி சுத்தப்படுத்தி மூடி வைத்து பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.