மேலும், ஒரு நாளைக்கு 100 கிலோ கழிவுகளை உற்பத்தி செய்பவர்கள், தங்கள் சொந்த கழிவு செயலாக்க வசதியை வைத்திருக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் 500 தரமான குப்பை தொட்டிகள் மற்றும் 5 கம்பாக்டர்கள் வாங்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 100 வார்டுகளில் ஒரு நாளுக்கு 600 டன் கழிவுகள் மட்டுமே உற்பத்தி ஆகும் என்று கோவை மாநகராட்சி நினைத்திருந்த நிலையில், நாளொன்றுக்கு 1,200 டன் கழிவுகள் கோவை மாநகராட்சியால் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
கழிவு மேலாண்மை ஒப்பந்ததாரர், கோவை ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை நிறுவனம் பிரைவேட் லிமிட் 600 டன் கழிவுகளையும், கோவை மாநகராட்சி 100 முதல் 150 டன் கழிவுகளை உரமாக மாற்றி கையாண்டு கொண்டிருக்கும் நிலையில், மீதம் உள்ள கழிவுகள் வெள்ளலூர் பகுதியில் கொட்டப்பட்டு வந்தன.
இந்த நிலையில், 500 தரமான குப்பை தொட்டிகள் மற்றும் 5 கம்பாக்டர்கள் வாங்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப கூறுகையில்;
பிரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். நாளொன்றுக்கு சுமார் 90 டன்களில் இருந்து, கடந்த 10 நாட்களில் 170-180 டன்னாக மேம்பட்டுள்ளது. மேலும், முன்னேற்றத்திற்கான வாய்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது என்றார்.
நாங்கள் 500 தரமான குப்பை தொட்டிகள் மற்றும் 5 கம்பாக்டர்கள் வாங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறிய அவர், ஒரு நாளைக்கு 100 கிலோ கழிவுகளை உற்பத்தி செய்பவர்கள் தங்கள் சொந்த கழிவு செயலாக்க வசதியை வைத்திருக்க வேண்டும் அல்லது SWM விதிகள் 2016ன் படி ஒரு Pvt சேவை வழங்குனருடன் இணைந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த வாரம் ஹோட்டல் சங்கத்துடன் கலந்துரையாடல் நடத்தினோம். அதனை தொடர்ந்து, கடந்த வாரத்தில் சுமார் 10 புதிய நிறுவனங்கள் இப்போது தனியார் சேவை வழங்குநர்களுடன் இணைந்துள்ளதாக கூறினார்.
அடுத்த வாரம் வெகுஜன துப்புரவு வாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், 5.9 லட்சம் கனமீட்டரில் 1.16 லட்சம் கனமீட்டர் பயோ மைனிங் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக கனமழை காரணமாக, பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டமான ஸ்வச் சர்வேக்ஷனில் கோவையின் தரவரிசையை மேம்படுத்துவதில் தீவிர பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு MCCயும்(micro composting centre) ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட MCCகளில் இன்றளவில் 6 செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ளவை ஷ்ரடிங் மிஷின் வாங்காததாலும், மின் இணைப்பு பெறாததாலும் செயல்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் என்று கூறினார்.