கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டுப் பொருட்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு..!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வீட்டில் உள்ள பீரோ, மேசை, பாத்திரங்களுடன் வந்து வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டுப் பொருள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மருதமலை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி - லட்சுமி தம்பதியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வீட்டில் உள்ள பீரோ, மேசை, பாத்திரங்களுடன் வந்து வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.



கருப்பு சாமியின் அண்ணன் தங்களை வாழவிடாமல் இடையூறு செய்ததாகவும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி குடிசையை எரித்து விட்டதாகவும் இதனால் தங்களின் ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகள் பாழாகிவிட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டனர்.



குறிப்பாக, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர்கள், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்களுக்கு ஒரு தீர்வு தர வேண்டும் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.



பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அந்த மினிடோர் வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...