தன்னார்வலர்களுக்கான கருத்தாளர் பயிற்சி கோவை தேர் நிலை திடம் பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கோவை: கோவையில் துவங்கிய இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கான கருத்தாளர் பயிற்சி நடைபெற்றது.
தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். ஆசிரியர் உட்பட தன்னார்வலர்கள் பயிற்சி பெற்று மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று கல்வி கற்றுத் தர இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
கடந்த நவம்பர் 29ம் தேதி கோவையில் இத்திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், இன்று அத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான கருத்தாளர் பயிற்சி கோவை தேர் நிலை திடம் பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

இதில் ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரையாளர்கள், 195 கருத்தாளர்களுக்கு (ஆசிரியர், பயிற்றுநர்கள், சமூக அமைப்புகள்) பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியானது இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இதில் பயிற்சி மேற்கொண்டவர்கள் இதர தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.