கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் உத்தரவின் படி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை புறநகர் பகுதிகளில் நேற்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மூவரை கைது செய்த போலீசார், நேற்று ஒரே நாளில் சுமார் 120 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை எஸ்.பி.செல்வநாகரத்தினம் உத்தரவின் படி மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிப்படையினர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நியூ எக்ஸ்டென்ஷன் வீதியில் உள்ள வணிக வளாகத்தில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டிக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அதே வீதியைச் சேர்ந்த கமாலுதீன் என்பவரது மகன் (38) என்பவரிடம் இருந்து சுமார் 72 கிலோ புகையிலை பொருட்களையும், அதே போல் அன்னாஜி ராவ் வீதியில் உள்ள மொத்த வியாபார மளிகைக்கடையில் 18 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த தமீம் அன்சாரி என்பவரது மகன் ராபிதீன் (50) என்பவரையும் கைது செய்துள்ளனர்.
இதேபோல், சூலூர் முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த சூலூர் நேரு நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் சுந்தர்(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் டூவீலர் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் சுமார் 120 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.