கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இயற்பியல் ஆசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

தனக்கு ஜாமீன் கோரி கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மிதுன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார்.


கோவை: கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியினுடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவையில் பிளஸ் 2 மாணவி கடந்த நவம்பர் 11-ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பயின்ற பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (31) பாலியல் தொல்லை கொடுத்ததால், தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்ஸோ) வழக்குப்பதிவு செய்து மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மிதுன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.குலசேகரன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நேற்று அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...