கோவையில் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..!! வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி தீவிரம்..!

கோவை மாநகராட்சி பகுதியில் 21 பேர், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் தற்போது 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதில், பெரியநெகமம், சின்னவேடம்பட்டி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 2 சிறுவர்கள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதியில் 21 பேர், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி மற்றும் ஊரக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் தற்போது மழை ஓய்ந்து வெயில் அடித்து வருகிறது. இதனால் தேங்கி நிற்கும் மழைதண்ணீரில் கொசுக்கள் வேகமாக உற்பத்தி ஆகும்.

இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. மாநகராட்சியில் 21 பேர், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையொட்டி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணியில் 800 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது காய்ச்சல் அதிகரித்து வருவதால் கூடுதலாக 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்வார்கள்.

அப்போது, அங்கு தண்ணீர் தேங்கி இருந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும் கொசுப்புழுக்களை அழிக்க அபேட் எனும் மருந்து ஊற்றுகின்றனர்.

வீடுகள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததற்காக இதுவரை ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ஊரக பகுதிகளில் ஊராட்சிக்கு 2 பேர் வீதமும், பேரூராட்சி பகுதியில் 10 பேர் வீதமும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதோடு வீடு, வீடாக ஆய்வு செய்து பழைய பொருட்களில் தண்ணீர் புகாதவாறு வைக்க அறிவுறுத்துகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...