சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதாகக் கூறி மூன்று தென்னை நார் தொழிற்சாலைகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதாகக் கூறி மூன்று தென்னை நார் தொழிற்சாலைகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், தொழிற்சாலை ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி வட்டத்துக்கு உட்பட்ட திம்மங்குத்து ஊராட்சியில் 3 தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தென்னை நார் துகள்கள் காற்றில் கலப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகவும், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தென்னை நார் கழுவிய தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் மாசு ஏற்படுவதாகவும் மேலும் தொழிற்சாலைக்கு ஆழியாறு ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் 3 தென்னை நார் தொழிற்சாலைகளையும் மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோவை மண்டல அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதன்படி தொழிற்சாலை மூடுவதற்காக, ‘நிறுவன மூடல்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வரும் மின் இணைப்பினை துண்டிக்க மின்வாரியத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் தொழிற்சாலைக்கான மின் இணைப்பினை துண்டித்தனர். இதனை தொடர்ந்து, 3 தென்னை நார் தொழிற்சாலைகளும் நேற்று மூடப்பட்டது.
இந்நிலையில், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தொழிற்சாலையை திறக்க அரசு முன்வர வேண்டும் என்று கோரி பொள்ளாச்சி பாலக்காடு ரோடு ரா பட்டினம் பிரிவு அருகே நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொள்ளாச்சி தாலுக்கா போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதனால் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.