மேலும், பெண்களுக்கான வளர்ச்சி பணிகள், பெண்களுக்கு உதவி சேவைகள், இல்லம் தேடி கல்வி போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை: வால்பாறையில் உள்ள காருண்யா சமூக மையத்தில் 56 இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம் சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காருண்யா சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் பெண்களுக்கான வளர்ச்சி பணிகள், பெண்களுக்கு உதவி சேவைகள், போஸ்ட் கோவிட் 19 திட்டத்தின் மூலம் 10 எஸ்டேட் பகுதிகளில் இல்லம் தேடி கல்வி, சிறு தொழில் பயிற்சி, இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சி, முதியோர்களுக்கான உதவித்தொகை மற்றும் மருத்துவ வசதி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

அதில் ஓட்டுநர் பயிற்சி பெற்ற ஐம்பத்து ஆறு இளைஞர்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழா காருண்யா சமூக மையத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு காருண்யா சமூக மையத்தின் இயக்குனர் சிஸ்டர் அனிலா மேத்யூ முன்னிலையில் வகித்தார். வால்பாறை வட்டாட்சியர் குமார் தலைமை தாங்கினார்.
இதில் 56 இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் காப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டது. வால்பாறை வட்டாட்சியர் குமார் மற்றும் புனித லூக்கா தேவாலயத்தில் பங்குத் தந்தை ஷாஜி மெரினா ஆகியோர் உரிமம் சான்றிதழ் வழங்கினர்.
இந்நிகழ்வில், வால்பாறை தனலட்சுமி ஓட்டுநர் பயிற்சி அலுவலகம் மீனா, காருண்யா சமூக மையம் அலுவலகர் டெய்சி பிந்து போன்றவர்கள் கலந்து கொண்டனர்.