மேலும், அவர்களிடம் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடிகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர்: உடுமலை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள போலி பீடிகள் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
உடுமலை பகுதியில் போலி 10ம் நம்பர் பீடிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து, உடுமலை சாரதாமணி லேஅவுட்டில் ஒரு கார் ஷெட்டில் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் 10ம் நம்பர் போலி பீடிகள் மூட்டை மூட்டையாக சிக்கின.
பின்னர், காப்புரிமை பெறாமல் போலியாக விற்பனை செய்து வந்த உடுமலை மலையாண்டிபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து(41), திருநெல்வேலியைச் சேர்ந்த மாரிமுத்து(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இ்ருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடிகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன.