கோவையில் மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் சடலமாக மீட்பு..!

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் கடந்த 10ம் தேதி மாயமானவர் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள காட்டூர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (52) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 10ம் தேதி இவர் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.

அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மேலும், அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாப்பநாயக்கன் பாளையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அதில் கார்த்திகேயன் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பின்னர், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் கார்த்திகேயன் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...