வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு வீடுகளை இடித்து சேதப்படுத்திய 3 காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் இருக்க வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு வீடுகளை 3 காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குறிப்பாக, வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட சின்னக்கல்லாறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், நேற்று இரவு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் அப்பகுதி குடியிருப்பு பகுதியில் நுழைந்த அங்கு உள்ள ராஜன், பிரேமா, சின்னு, திலகம் ஆகியோர் வீடுகளை காட்டுயானைகள் சுவரை இடித்து, உள்ளிருந்த பொருட்களை கட்டில், டிவி, சமையல் பொருட்கள் போன்றவைகளை சேதப்படுத்தியது.



இதையடுத்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்து வனத்துறையினர் யானைகளை விரட்டினர். இதனிடையே, காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் இருக்க வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...