திருப்பூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நபர் கைது - 100 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்..!

மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பனியன் மற்றும் மில்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இவ்வாறு நகரை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் வசித்து வருபவர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட், குட்கா பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக புகார்கள் வருவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் அருகே ஊத்துக்குளி காவல் நிலைய பகுதியில், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள கடை ஒன்றில் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு சென்ற உதவி ஆய்வாளர் தவசியப்பன் தலைமையிலான போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சிட்கோ எதிரில் செயல்பட்டு ஈஸ்வரி மளிகை கடையில் 7,616 பாக்கெட் குட்காவும், கஞ்சா கலந்த சாக்லெட் 6,640 பாக்கெட்டும் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, கடையின் உரிமையாளர் சொக்கலிங்கம்(55) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை திருப்பூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.



இதே போல், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக பெருமாநல்லூர் அருகே கஞ்சா சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ச்சியாக திருப்பூர் மாநகரின் சுற்று வட்டார பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...