கோவையில் திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்..!

வரும் 9ம் தேதி நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திமுக சார்பில் செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து மாவட்ட பொறுப்பாளர் மருதமலை ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தைத்திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக ஜனவரி 9ம் தேதி கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது.



இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருகிற 9ம் தேதி நடைபெற இருக்கின்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் இருகூர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர் ராஜசேகரன், குறிச்சி பகுதி பொறுப்பாளர்கள் காதர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், ஜல்லிக்கட்டு பேரவை மாநில செயலாளர் நாராயணன், ரேக்ளா பேரவை தலைவர் காளிங்கராஜ், MRR.பிரகாஷ், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமது யாசின் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...