கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சோமவார உற்சவ விழா - கோவில் பூட்டப்பட்டதால் வெளியே நின்று சாமி தரிசனம்..!

பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் பூட்டப்பட்ட கோவில் முன்பு உப்பு, மிளகு, அகல்விளக்கு, பத்தி, சூடம் தேங்காய் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சோமவார உற்சவ விழாவில் கோவில் பூட்டப்பட்டதால் வெளியே நின்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையத்தில் பழமைவாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சோமவார உற்சவ திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நேற்று சோமவார உற்சவ விழா தொடங்கியது. முதல் நாள் என்பதால் பக்தர்களிடம் வருகை குறைவாகவே இருந்தது.

ஆனால், இரண்டாம் நாளான இன்று கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் பக்தர்கள் நஞ்சுண்டேஸ்வர சாமியை தரிசனம் செய்ய வந்தனர்.

இந்நிலையில், கோவிலுக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகிகள் சார்பிலும் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் கோவில் நிர்வாகிகள் சோமவார உற்சவ விழா அன்று கோவில் கதவை பூட்டி விடுவார்கள்.

அதேபோல் இந்த ஆண்டும் நடைபெறும் சோமவார உற்சவ விழாவில் கோவில் நடை பூட்டப்பட்டிருந்தது. மேலும் கோவில் முன்பு கயிறு கட்டப்பட்டுள்ளது.



ஆனாலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பூட்டப்பட்ட கோவில் முன்பு உப்பு, மிளகு, அகல்விளக்கு, பத்தி, சூடம் தேங்காய் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...