உங்களால் போஸ்டர் ஒட்டாமல் அரசியல் செய்ய முடியுமா? கோவை அனைத்து கட்சி அரசியல்வாதிகளுக்கு பாமக அசோக் ஶ்ரீநிதி சவால்..!

பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவது சட்டவிரோதமானது எனவும் தனது முதல்‌ வாக்குறுதியாக, போஸ்டர்‌ ஒட்டுவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



கோவை: பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவது சட்டவிரோதமானது எனவும் போஸ்டர் கலாச்சாரத்தை கைவிட வேண்டும் என்று கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



கோவை மாவட்டத்தில் தற்போது அனைத்து பொது சுவரிலும்‌, பாலத்திலும்‌ போஸ்டர்‌ ஒட்டப்பட்டு, அசிங்கமாகவும்‌ அசுத்தமாகவும்‌ காட்சியளிக்கிறது. இந்த போஸ்டர்‌ கலாச்சாரத்தை உடனடியாக ஒழிக்க வேண்டும்‌. இந்த போஸ்டர்கள்‌ அனைத்துமே அரசியல்வாதிகளின்‌ விளம்பரங்களே.

நான்‌ பாமகவின்‌ மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளேன்‌. எனது முதல்‌ வாக்குறுதியாக, போஸ்டர்‌ ஒட்டுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். இப்படி அனைத்து அரசியால்வாத்களும்‌ முடிவெடுத்தால்‌ நமது கோவை மாநகரம்‌ சுத்தமாகவும்‌ அழகாகவும்‌ மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.



மேலும், பொது இடங்களில்‌ போஸ்டர்‌ ஒட்டுவது சட்டப்படி குற்றமாகும்‌. இதையே நமது சட்டம்‌ (Prevention of Disfigurement Act) திறந்தவெளி அழகைக்‌ குலைத்தலைத்‌ தடுத்தல் சட்டம்‌ சொல்கிறது.

அதேபோல, டெல்லி உயர்‌ நீதிமன்றமும்‌ அத்துமீறி பொதுஇடங்களில்‌ போஸ்டர்‌ ஓட்டுபவர்கள்‌ மீது IPC 425, 434 ஆகிய பிரிவுகளில்‌ வழக்கு பதிவு செய்யலாம்‌ என்று கூறியிருக்கிறது.



இதனால்‌ மாற்று கட்சி அரசியல்வாதிகளுக்கு NO POSTER CHALLENGE என்ற சவாலை விடுத்துள்ளேன்‌. மேலும், இந்த சவாலை கடிதம்‌ மூலமாகவும்‌ குறுஞ்செய்தி மூலமாகவும் அனுப்பியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



போஸ்டர் கலாச்சாரத்தை கைவிட வலியுறுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக், விஎம்சி மனோகரன், எம்எல்ஏ எஸ்பி வேலுமணி, பி. ஆர்.நடராஜன் எம்.பி, மக்கள் நீதி மய்யம் அனுஷா ரவி, நாம் தமிழர் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கு அசோக் ஸ்ரீநிதி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...