சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் புகுந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பத்திரமாக மீட்டு அடர் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர்.
கோவை: கோவை சிறுமுகை லிங்காபுரத்தில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் அவ்வப்போது வனப்பகுதிக்குள் இருந்து மான், யானை, பாம்பு உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவது வழக்கம்.
இந்த நிலையில், இன்று லிங்காபுரம் பகுதியில் உள்ள ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மலைப்பாம்பு ஒன்று உடலில் லேசான காயங்களுடன் படுத்திருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பத்திரமாக மீட்டனர்.
பின்னர், அதனை அடர் வனப்பகுதிக்குள் சென்று பத்திரமாக விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.