மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்கக்கோரி பொள்ளாச்சியில் மறியல் போராட்டம்..!

மேலும், அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் தங்களது போராட்டங்கள் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாற்றுத்திறனாளிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்

மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை தெலுங்கானா, புதுச்சேரி போல் ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் கடும் ஊனத்திற்கு ரூ.5,000/- வழங்க வேண்டும்.

மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சிகளில் தனிக்குழு அமைத்து அரசாணைப்படி 4 மணி நேர முழு வேலை வழங்க உறுதிப்படுத்த வேண்டும்.

நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசு உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகள் உள்ள ரேசன் கார்டுகளை மாதம் 35கி அரிசி வழங்கும் AAY கார்டுகளாக மாற்றி வழங்க வேண்டும்.

வீடு இல்லா மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும், அடையாள சான்று இல்லாதவர்களுக்கு கிராமங்களில் முகாம் நடத்தி

பேருந்து பயண சலுகை, ரயில் பயண சலுகை சான்றிதழ் உள்ளூரில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், இல்லையென்றால் தங்களது போராட்டங்கள் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னர், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...