கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு; ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

சிறையில் உள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு சற்று நேரத்திற்கு முன்பு இந்த சட்டத்திற்கான உத்தரவு நகல் சிறையில் வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள 17 வயது மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து, அவரது பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்பொழுது அவர் சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக மாநகர ஆணையர் பிரதீப் குமாருக்கு குண்டர் சட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த கோவை மாநகர ஆணையர் நேற்று இரவு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, சிறையில் உள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு சற்று நேரத்திற்கு முன்பு இந்த சட்டத்திற்கான உத்தரவு நகல் சிறையில் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...