பொள்ளாச்சியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை..!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட உத்திரராஜனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் உத்திரராஜ்(41). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு இவரது நிறுவனத்தில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தாத்தூர் பகுதியைச் சேர்ந்த சேவியர் என்பவருக்கு கடனாக பணம் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால், சேவியர் அந்த பணத்தை முறையாக செலுத்தவில்லை. இதுதொடர்பாக, உத்திரராஜ் மற்றும் ஜெயக்குமாருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உத்திரராஜ் ஜெயக்குமார் வீட்டுக்குச் சென்று அவரை தகாத வார்த்தையால் பேசி திட்டியதோடு ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர் செந்தில் குமார் ஆகியோரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உத்திரராஜனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞராக தேவசேனாதிபதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட உத்திரராஜனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...