கோவையில் கஞ்சா வியாபாரியை துரத்தி பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளருக்கு கை எலும்பு முறிவு

கோவையில் கஞ்சா வியாபாரியை துரத்தி பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் கஞ்சா வியாபாரியை துரத்தி பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் சுகந்தராஜா ஆகியோர் அண்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை சிவானந்தா காலணி பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ராஜேஸ் கண்ணா விசாரிக்க முற்பட்டபோது சூரிய பிரகாஷ் தப்பி ஓட முயற்சி செய்தார்.

விரட்டி பிடிக்க முயன்றபோது ஆய்வாளரைத் தள்ளிவிட்டு சூர்யபிரகாஷ் ஓடி விட்டார். இதில், ஆய்வாளருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன் கால்களில் காயம் ஏற்பட்டது. உடனிருந்த தலைமை காவலர் சுகந்தராஜா சூரிய பிரகாஷை துரத்தி பிடித்து விசாரணை மேற்கொண்டார். இதில் படுகாயமடைந்த ஆய்வாளர் ராஜேஸ் கண்ணா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...