சிறு-குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அமைப்புகளின்‌ கூட்டமைப்பு : ஒரு நாள்‌ கதவடைப்புக்கு அழைப்பு

தொடர்ந்து உயர்ந்து வரும்‌ மூலப்பொருள்‌ விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்திச் சிறு-குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அமைப்புகளின்‌ அகில இந்திய அளவிலான கூட்டமைப்பின்‌ கீழ்‌ நாடெங்கும்‌ உள்ள தொழில்‌ அமைப்புகள்‌ இணைந்து 20.12.2021 அன்று ஒரு நாள்‌ கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தொடர்ந்து உயர்ந்து வரும்‌ மூலப்பொருள்‌ விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்திச் சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அமைப்புகளின்‌ அகில இந்திய அளவிலான கூட்டமைப்பின்‌ கீழ்‌ நாடெங்கும்‌ உள்ள தொழில்‌ அமைப்புகள்‌ இணைந்து 20.12.2021 அன்று ஒரு நாள்‌ கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நம்‌ நாட்டின்‌ பொருளாதாரத்தின்‌ முக்கிய பின்புலமாக விளங்கும்‌ சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ துறையானது உள்நாட்டு உற்பத்தியில்‌ 30%, ஏற்றுமதி உற்பத்தி 48% பங்களிப்பு அளிப்பதோடு, 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்‌ துறையாகவும்‌, 40 கோடி பேர்‌ சார்ந்திருக்கும்‌ துறையாகவும்‌ உள்ளது.

இந்த நிலையில்‌ பவுண்டரிக்கு தேவையான இரும்பு மூலப்பொருள்‌ தொடங்கி, தேனிரும்பு, அலுமினியம்‌, தாமிரம்‌, பேக்கிங்‌ காகிதம்‌, பிளாஸ்டிக்‌ என அனைத்து மூலப்பொருட்களும்‌ சமாளிக்க முடியாத அளவு பல மடங்கு விலை ஏற்றம்‌ கண்டு வருகின்றன. இதனால்‌ நாடு முழுவதும்‌ உள்ள சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ மிகக்‌ கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தங்கள்‌ தொழிலைத்‌ தொடர இயலாமல்‌ இருப்பதோடு, பல லட்சம்‌ பேர்‌ வேலையிழக்கும்‌ அபாயமும்‌ தோன்றி உள்ளது.

இது குறித்து இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களுக்கும்‌, பல்வேறு துறைகளின்‌ அமைச்சர்களுக்கும்‌ பலமுறை கோரிக்கைகள்‌ அளித்தும்‌ மூலப்பொருள்‌ விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக்‌ கட்டுப்படுத்த இயலவில்லை.

எனவே, வரும்‌ 20.12.2021 திங்கள்‌ அன்று இந்திய நாடெங்கும்‌ உள்ள சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழிற்சாலைகள்‌, மூலப்பொருட்கள்‌ விலை ஏற்றத்தை கட்டுக்குள்‌ கொண்டுவர அரசு உடனடியாக தலையிட்டு, தீர்வுகாண வலியுறுத்தி, தங்கள்‌ தொழிற்சாலைகளில்‌ ஒரு நாள்‌ கதவடைப்பு செய்ய உள்ளோம்‌. மேலும்‌ அன்று காலை 11 மணி அளவில்‌ அந்தந்த மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகம்‌ முன்பு அமைதியான முறையில்‌ கூடி இச்செய்தியை பிரதமரின்‌ கவனத்திற்கு எடுத்துச்‌ செல்ல உள்ளோம்‌.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...