கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..!

மதுக்கரை அருகே 30 கிலோ எடையுள்ள 25 மூட்டைகளில் 700 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்ற வழக்கில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 700 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பெண் உட்பட 2 பேரை கைது செய்தனர்.

ரேசன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்க மதுக்கரை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் வேலந்தாவளம், குமிட்டிபதி, வழுக்கல் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக அதிகாலை 3 மணியளவில் வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்றது.

இதையடுத்து, அதிகாரிகள் விரட்டிச் சென்று ஆட்டோவை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில் 30 கிலோ எடையுள்ள 25 மூட்டைகளில் 700 கிலோ ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் திருமுறை நகரைச் சேர்ந்த பீட்டர் (56), பிச்சனூர் அருகே உள்ள ரெங்க சமுத்திரத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் (48) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், ஆட்டோவில் 700 கிலோ ரேசன் அரிசி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பேரையும் மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...