நிதியுதவியும் ஊட்டச்சத்து பெட்டகமும் பல மாதங்களாக வழங்கப்படாமல் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் பாதிப்படைவதாக குறிப்பிட்டுள்ளார்.
கோவை: கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கக் கோரி சமூக ஆர்வலர் கர்ப்பிணி பெண் வேடமணிந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை கிணத்துக்கடவு இம்மிடிபாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி என்பவர் கர்ப்பிணி பெண் போன்று வேடமணிந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில், தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் மகப்பேறு திட்டம் மூலம் நிதி உதவியும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிதியுதவியும் ஊட்டச்சத்து பெட்டகமும் பல மாதங்களாக வழங்கப்படாமல் கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் பாதிப்படைகின்றனர். எனவே, உடனடியாக இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.