கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்த மக்கள்

கோவிலை இடித்துவிட்டு அதே இடத்தில் 6-தளங்களாக 448-வீடுகளாக அமைக்க உள்ளதாக RTI பதில் மனுவில் தெரிவித்தநிலையில், மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த சி.எம்.சி காலனி மக்கள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தனர். அதனைக் கேட்டறிந்த ஆணையாளர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.


கோவை: காலையிலிருந்து கோவை மாநகராட்சி ஆணையாளரைக் காண்பதற்காகக் காத்துக்கொண்டு இருந்த சி.எம்.சி காலனியை சேர்ந்த பொதுமக்கள் –மாலை 3-மணியளவில் பொதுமக்களைச் சந்தித்த கோவை மாநகராட்சி ஆணையாளர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.



கோவை சி.எம்.சி காலனியில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் 5-தலைமுறைகளாக வசித்து வரும் தூய்மை பணியாளர்கள் தங்கள் இடத்தை மாற்றி அமைத்து தரும் கோவை மாநகராட்சியின் திட்டத்தில் உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளனர்.

சி.எம்.சி காலனி பகுதியில் வசிக்கும் மக்கள் கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களாகவும், ஒப்பந்த கூலிகளாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குடியிருப்பிற்கு மாநகராட்சி பொதுமக்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்துவந்துள்ளது.

அந்த கட்டணத்தைக் கட்டிமுடித்த நிலையில், குடியிருப்பினை சொந்தமாக்கியுள்ளனர். மேலும், பொதுமக்களுக்குச் சொந்தமான 432-குடியிருப்பிலிருந்து மக்களை வெளியேற்றம் செய்துள்ளனர் என்றும், தற்போது வீட்டின் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருத்த நிலையில், வேலை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் பல வருடங்களாய் வழிப்பட்டுக் கொண்டு இருக்கும் மதுரை வீரன் கோவிலை இடித்துவிட்டு அதே இடத்தில் 6-தளங்களாக 448-வீடுகளாக அமைக்க உள்ளதாக RTI பதில் மனுவில் தெரிவித்துள்ளது. இதனால், எதிர்கால சந்ததிகளுக்கு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த சி.எம்.சி மக்கள் கவலை தெரிவித்தனர்.



நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு ஆணையாளரைச் சந்தித்த பொதுமக்கள் அவர்களது கோரிக்கையை முன்வைத்தனர். அதனைக் கேட்டறிந்த ஆணையாளர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...