பொள்ளாச்சியில் 10 ரூபாய்க்கு வேட்டி ரூ.50க்கு சேலை விற்பனை..!

பொள்ளாச்சி அருகே கமலிகா சில்க்ஸ் என்று சமீபத்தில் தொடங்கப்பட்ட துணிக்கடையில் 100வது நாளை கொண்டாடும் வகையில் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் 10 ரூபாய்க்கு வேட்டியும், 50 ரூபாய்க்கு சேலையும் விற்பனை செய்த துணிக்கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையம் அருகில் கமலிகா சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது. கடை தொடங்கி 100வது நாளை கொண்டாடும் வகையிலும், கடையின் உரிமையாளர் சரவணகுமார் தனது மகன் பெயரில் புதிதாக தயாரிக்கப்படும் யுவராஜ் வேட்டிகளை அறிமுகப்படுத்தும் வகையிலும் நூதன திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, இன்று ஒரு நாள் மட்டும் வேட்டி 10 ரூபாய்க்கும், சேலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு செய்தார்.

இந்த தகவல் பரவியதும் இன்று காலை முதலே கடைக்கு முன்பாக ஆண்களும் பெண்களும் குவியத் தொடங்கினர்.

துணிக்கடையின் உரிமையாளர் சரவணக்குமார் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் யுவராஜ் வேட்டிகளை லயன்ஸ் சங்க நிர்வாகி ராஜசேகர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனையடுத்து, ரூ.10க்கு வேட்டி விற்பனையை கே.எம். சாரீஸ் உரிமையாளர் கமருதீன் தொடங்கி வைக்க, முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் பெற்றுக்கொண்டார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...