குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் இருப்பதால் அப்பகுதியில் மின் மயானம் அமைக்க கூடாது என மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது மண்டலம் 54வது வார்டு கருப்பன் கவுண்டம்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் மின் மயானம் அமைக்க கோரி மாநகராட்சி மூலம் மண் பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும், ஆனால், குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் மின் மயானம் அமைக்கும் பட்சத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அரசு பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் ஆகியவை இருப்பதால் அப்பகுதியில் மின் மயானம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.