திருப்பூர் கஜலட்சுமி ரோட்டில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தற்போது வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றால் ஒரே தவணையில் 1 லட்சத்து 900 ரூபாய் கட்ட வேண்டும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் கஜலட்சுமி ரோடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கஜலட்சுமி திரையரங்கம் அருகே நொய்யல் ஆற்றங்கரையோரம் ஏராளமான குடும்பத்தினர் பினாயில் மற்றும் தொடப்பம் உள்ளிட்டவை வியாபாரம் செய்து அங்கேயே தங்கி வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலிபாளையம் பகுதியில் வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் அவ்விடத்தில் ஏற்கனவே பலருக்கு பட்டா வழங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 2019ம் ஆண்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக 10 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக ஏற்கனவே இவர்கள் செலுத்தியுள்ள நிலையில், தற்போது வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றால் ஒரே தவணையில் 1 லட்சத்து 900 ரூபாய் கட்ட வேண்டும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், இதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் சிறிது சிறிதாக செலுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.



மேலும், தற்போது கூட வீடு ஒதுக்கீடு செய்த உடன் மாத தவணையை செலுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஒரே தவணையாக செலுத்த வற்புறுத்துவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



மேலும், மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...