காலை 8.45 மணியில் இருந்து மதியம் 1.45 மணி வரை ஒரு பகுதியாகவும், மதியம் 1.45 முதல் மாலை 6.45 மணி வரை ஒரு பகுதியாகவும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் இரண்டு பிரிவாக நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது, கலைக்கல்லூரி வளாகத்தில் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இதனால், இடப்பற்றாக்குறை உள்ளது. இதையடுத்து, மாணவர்களுக்கு நேரடியாக வகுப்பு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, மாணவர்களுக்கு பேராசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வந்தனர். கொரோனா வார்டை இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முழுவதுமாக குறையாமல் இருப்பதால் கொரோனா வார்டை பிற பகுதிக்கு மாற்ற இயலாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
எனவே, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க இன்று முதல் மாணவர்களுக்கு பகுதி நேரமாக வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, காலை 8.45 மணியில் இருந்து மதியம் 1.45 மணி வரை ஒரு பகுதியாகவும், மதியம் 1.45 முதல் மாலை 6.45 மணி வரை ஒரு பகுதியாகவும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இது குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி தெரிவித்தார்.
மேலும், கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டியில் கழிவறை வசதியை அதிகப்படுத்தக் கோரி ஒரு புகார் மனு இருந்தது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.