கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி..!

இந்த விபத்தில் அங்கிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. மேலும், 3க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


கோவை: கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் வரதராஜுலு (40). இவர் சின்னியம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினரின் கணவர். இந்நிலையில், நேற்று கோவை அவிநாசி ரோடு பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி அவருடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சின்னியம்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் சாலையோரமாக நின்றிருந்த வாலிபர் மீது மோதி அங்கு இருந்த மோட்டார் சைக்கிள், சாலையோரமாக நின்றவர்கள் மீது மோதி கடைக்குள் புகுந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பலியானார். அங்கிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. இதில் 3க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசாரின் விசாரணையில் கார் மோதி இறந்த வாலிபர் வெள்ளணைபட்டி ட்ரான்ஸ்போர்ட் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் கலையரசன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த வரதராஜிலு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...