கோவையில் வரத்து குறைவால் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..! மல்லி கிலோ ரூ.3,000க்கு விற்பனை..!!

கடந்த வாரம் கிலோ ஒரு ரூ. 700க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் பருவமழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் மற்றும் வெளிமாநில பகுதிகளில் இருந்து, விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், கோவை பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை விட மல்லிகை 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் கிலோ ஒரு ரூ. 700க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

இதேபோல், கடந்த வாரம் ரூ.600-க்கு விற்ற முல்லை, நேற்று ரூ.1600க்கு விற்பனையானது. மேலும், கோழிக்கொண்டை கிலோ ரூ.200, ஜாதி முல்லை ரூ.1000, செவ்வந்தி (மஞ்சள்) ரூ.200 செவ்வந்தி (வெள்ளை), ரூ.320, செண்டுமல்லி ரூ.280, 15 பூக்கள் கொண்ட ரோஸ் கட்டு 200, ஒரு தாமரைப்பூ ரூ.25-க்கும் விற்பனையானது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில்,"தொடர் மழை காரணமாக வழக்கத்தை விட பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் இன்று இந்த மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் மேலும் விலை அதிகரிக்கலாம். அடுத்த மாதம் பூக்கள் விலை குறைந்து விடும்'' என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...