திருப்பூரில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் காவலர் இடையே மோதல்..! படுகாயங்களுடன் பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!

மஃப்டியில் இருந்த காவலர் தாக்கியதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநரும், ஓட்டுநர் தன்னைத் தாக்கியதாக காவலரும் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் பேருந்தை நிறுத்துவது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் திருப்பூர் தெற்கு நிலையை காவலர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் போக்குவரத்து கிளைப் பணிமனையில் பணிபுரிந்து வரக்கூடிய அரசு பேருந்து ஓட்டுநர் வடிவேல் நேற்று வழக்கம்போல பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு பேருந்தை இயக்கி வந்துள்ளார்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தும் போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டுமென மப்டியில் இருந்த திருப்பூர் தெற்கு நிலையை காவலர் சதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் மப்டியில் இருந்த காவலர் சதிஷ்குமார் ஓட்டுநர் வடிவேலை தாக்கியதாகவும், அதில் மூக்கு மற்றும் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.



இதேபோல் வாக்குவாதம் ஏற்பட்டதில் அரசு பேருந்து ஓட்டுநர் வடிவேல் காவலர் சதிஷ் குமாரை தாக்கியதாகவும், இதில் தான் காயமடைந்துள்ளதாக காவலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் ஓட்டுநர் வடிவேல் மற்றும் காவலர் சதீஷ்குமார் இருவரும் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...