கோவையில் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நின்ற 31-இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பொது இடங்களில் நீண்ட நாட்களாக நின்ற பறிமுதல் செய்யப்பட்ட 31-இருசக்கர வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அதன் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டறிய வாகனங்களின் எண் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.


கோவை: கோவையில் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நின்ற 31-இருசக்கர வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் போலீசார் இரவு ரோந்து சென்றனர். அப்போது கோவை-திருச்சிரோடு, வரதராஜபுரம்ரோடு உள்ளிட்ட இடங்களில் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 21-இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவை, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பீளமேடு போலீஸ் நிலைய பகுதியில் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட 31-இருசக்கர வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அதன் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டறிய வாகனங்களின் எண் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...