பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

பொள்ளாச்சி ஆனைமலையில் பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலையில் பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ் செய்தி அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனைமலை அருகே உள்ள கிராமத்தில் 16-வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கிராமம் என்பதால் இருவீட்டாரும் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளனர். இதை காரணமாக வைத்து வாலிபர் சிறுமியுடன் புகைப்படம் எடுத்தும் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி தனது மொபைல் போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.

இதையடுத்து சிறுமி வாலிபர் தன்னிடம் தகாத வார்த்தைகள் பேசியும் குறுஞ்செய்தி அனுப்புவதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர் சிறுமிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.

வாலிபரை ஆனைமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...