தடாகம் பள்ளி மாணவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் கைது..!

தடாகம் பள்ளி மாணவனிடம் ஆபாசப் படங்களைக் காட்டி சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர்.


கோவை: பள்ளி மாணவனிடம் ஆபாசப் படங்களைக் காட்டி சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை ஆனைக்கட்டி பகுதியைச் சேர்ந்த 15-வயது மாணவன் தடாகம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்காகப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தான்.

பஸ் கிடைக்காததால் அவ்வழியே சென்ற மினிடோர் ஆட்டோ ஒன்றை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். ஆட்டோவை ஓட்டி வந்த நபர் பள்ளி மாணவன் நிற்பதைப் பார்த்ததும் ஆட்டோவை நிறுத்தினார். தொடர்ந்த அந்த மாணவனை ஆட்டோவில் முன்பக்க இருக்கையில் தனக்கு அருகில் அமர வைத்துக் கொண்டார்.

பின்னர் ஆட்டோ செல்லச் செல்ல ஆட்டோ டிரைவர் தனது செல்போனை எடுத்து பள்ளி மாணவனிடம் கொடுத்து அதில் உள்ள படங்களைப் பார் என்று கூறியிருக்கிறார். பள்ளி மாணவனும் ஆர்வ மிகுதியால் அதிலிருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தான்.

அதில் ஆபாச படங்களும் வீடியோக்களும் இருந்துள்ளது. இதை பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவனிடம் ஆட்டோ டிரைவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும்,

ஆட்டோவை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி பள்ளி மாணவனிடம் தவறாக நடந்துள்ளார்.

பின்னர் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டு அந்த மாணவனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று விட்டார். மாணவன் பள்ளிக்கு வர தாமதமானதால் பள்ளியின் தலைமை ஆசிரியர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது பள்ளி மாணவன் தனக்கு நடந்த விஷயங்களை அவரிடம் கூறி உள்ளான். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் அந்த மாணவனின் பெற்றோரைப் பள்ளிக்கு வரச்செய்தார்.

தொடர்ந்து நடந்த விவரங்களை எடுத்துக் கூறியதை அடுத்து மாணவனின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பள்ளி மாணவனிடம் ஆபாசப் படங்களைக் காட்டி சில்மிஷம் செய்த நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த தெக்கு பாளையத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (40) என்பவரை போக்சோ சட்டத்தின் கிழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...