கோவையில் விஷம் குடித்த தொழிலாளிக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி பலி

திருமணம் ஆகாத விரக்தி, குடிப்பழக்கத்தைக் கைவிட முடியாததால் மனவேதனை அடைந்த இளைஞர் வீட்டில் விஷம் குடித்து, மருத்துவமனையில் சேர்த்த நிலையில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானதில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.


கோவை: திருமணம் ஆகாத விரக்தி, குடிப்பழக்கத்தைக் கைவிட முடியாததால் மனவேதனை அடைந்த இளைஞர் வீட்டில் விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கோவை கெம்பட்டி காலனி உப்பு மண்டியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (33). கூலி தொழிலாளி. இவருக்குத் திருமணம் ஆக வில்லை. இவருக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதைக் கைவிட முடியாததால் மனவேதனை அடைந்த காளிதாஸ் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

உடனே அவரை தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...