சூலூர் பாப்பம்பட்டி ராமய்யன் குட்டையில் கஞ்சா செடி: பொதுமக்கள் அதிர்ச்சி

பாப்பம்பட்டி பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா பயிரிடப்பட்டு உள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தகவல் தெரிவிப்பவர்களைக் கஞ்சா விற்பனையாளர்கள் அச்சுறுத்துவதால் குறிப்பிட்ட இடங்களை அடையாளம் காட்டுவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.


கோவை: நேற்று சனிக்கிழமை மாலை, சூலூர் வட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பம்பட்டி, ராமய்யன் குட்டை அருகே கஞ்சா செடிகளை, பொதுமக்கள் பார்த்துள்ளனர். இந்த தகவல் அப்பகுதியினர் இடையே வேகமாகப் பரவியது.

இதனையடுத்து, தகவலின் பேரில் அப்பகுதிக்கு சூலூர் காவல் உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் சென்ற காவல்துறையினர், அங்கு வளர்ந்துள்ள கஞ்சா செடிகளை ஆய்வு செய்தனர். பின்னர், உடனடியாக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வரவழைக்கப்பட்டு அவர் முன்னிலையில் அந்த செடிகளை வேருடன் பிடுங்கித் தீயிட்டு அழித்தனர்.

கஞ்சா விற்பவர்களை அடிக்கடி கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சூலூர் பகுதியில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாகவும், கஞ்சா வேண்டுவோருக்கு இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்து சிலர் கொடுத்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், பாப்பம்பட்டி பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா பயிரிடப்பட்டு உள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தகவல் தெரிவிப்பவர்களைக் கஞ்சா விற்பனையாளர்கள் அச்சுறுத்துவதால் குறிப்பிட்ட இடங்களை அடையாளம் காட்டுவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

உடல் நலத்திற்கும் சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கஞ்சாவை இப்பகுதியிலிருந்து ஒழிக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சூலூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கஞ்சா செடிகள் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...