நீலாம்பூர் மேம்பாலத்தின் கீழ் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது..!

இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.


கோவை: நீலாம்பூர் மேம்பாலத்தின் கீழ் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நீலாம்பூர் மேம்பாலத்தின் கீழ் சோதனை நடத்தினர்.



இதில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்த திருப்பூர் மாவட்டம், மாஸ்கோ நகர், சாமுண்டி புறத்தைச் சேர்ந்த சேர்ந்த சேட்டு என்பவரது மகன் ரஹீம் (23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1.100 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...