கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவு: விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணி துவங்கும் என தகவல்..!

கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் துவங்கும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.



கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில், 29 தூண்களுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதே போல, ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில், 15 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.



இதனிடையே கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆனால் ஜி.என்.மில்ஸ் மேம்பாலப் பணிகள் 30 சதவீதம் கூட நிறைவடையவில்லை.

இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கவுண்டம்பாளையம் மேம்பாலப்பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும்" என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...