கோவை கிணத்துக்கடவு அருகே சோதனைச்சாவடியில் மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் திடீர் ஆய்வு..!

அண்மைக்காலமாக உரிய அனுமதி இல்லாமல் லாரிகளில் கனிம வளங்களைக் கொண்டு செல்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தமிழக - கேரள எல்லை சோதனைச்சாவடியில் மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக -கேரள எல்லைப் பகுதியான வீரப்பகவுண்டனூர் பகுதி வழியாக பாறை கற்கள் கொண்டு செல்லும் லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது.

இந்நிலையில், அண்மைக்காலமாக உரிய அனுமதி இல்லாமல் லாரிகளில் கனிம வளங்களைக் கொண்டு செல்வதாக புகார் எழுந்தது.



இதையடுத்து, இன்று கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் திடீரென கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் சரியான முறையில் சோதனை செய்கிறார்களா? அதற்கான பதிவேடுகள் எழுதப்படுகிறதா? முறையான ஆவணங்கள் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.



மேலும், உரிய ஆவணங்கள் இன்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்புமாறு அங்கிருந்த காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பேரூர் டி.எஸ்.பி திருமால், கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...