திருப்பூர் கல்லூரி மாணவியிடம் சமூக வலைதளத்தில் பெண் போல் போலியான புகைப்படத்தை பதிவேற்றி பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது..!

மேலும், அவரிடம் பறிமுதல் செய்த செல்போனில் பல்வேறு இளம் பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை அடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


திருப்பூர்: சமூக வலைத்தளத்தில் பெண் போல் போலியான புகைப்படத்தை பதிவேற்றி கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த நியாஸ் என்பவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பெண் போல போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.

இதில் இவருடன் பழக்கமான திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பெண் குரலில் பேசி நட்புடன் பழகி உள்ளார். நட்புடன் பழகி வந்ததை அடுத்து கல்லூரி மாணவியிடம் அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார்.

மேலும், படங்களை பெற்ற நியாஸ் அதனை மார்பிங் செய்து ஆபாச படமாக உருவாக்கி அதனை மீண்டும் கல்லூரி மாணவிக்கு அனுப்பி, நிர்வாணமாக வீடியோ கால் அழைப்பில் வர வேண்டும், இல்லை என்றால் இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, கல்லூரி மாணவி திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நியாசை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றினர்.

மேலும், அவரது செல்போனை பார்த்த போது பல்வேறு இளம் பெண்களின் அரை நிர்வாணம், முழு நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...