மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார், ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் சட்டையை இறுக்கமாகப் போட்டதற்காக 11ம் வகுப்பு மாணவரை தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் தாக்கியதாக, மாணவனின் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மாணவன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயாலஜி பிரிவில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும், கால்பந்து வீரராகவும் மிளிர்ந்து வரும் மாணவன், கோவை மாவட்ட அணிக்கு தேர்வாகியுள்ளார். அதேபோல, நீட் தேர்வு பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது, பள்ளி திறந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், மாணவன் பள்ளிக்குச் சென்ற போது, அங்கு வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர், சட்டை ஏன் இறுக்கமாக உள்ளது என மாணவரை கேட்டுள்ளார். அதற்கு மாணவர் விளக்கமளித்த போதும், சமாதானம் அடையாத ஆசிரியர் அவரை அறைந்ததோடு, அவரை குனியவைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார் என்று மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இதில், மாணவருக்கு காது, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டதால், மாணவரின் தந்தை அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக, அவர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார், தனியார் பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.