குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசரின் உடல் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து திருச்சூர் கொண்டு செல்லப்பட்டது..!

முன்னதாக, ராணுவ விமானம் மூலம் அவரது உடல் டெல்லியிருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, சாலை மார்க்கமாக சொந்த ஊரான திருச்சூருக்கு கொண்டு செல்லப்பட்டது.


நீலகிரி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசர் பிரதீப்பின் உடல் ராணுவ விமானம் மூலம் டெல்லியிருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, சாலை மார்க்கமாக சொந்த ஊரான திருச்சூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசர் பிரதீப் ஏ என்பவரும் உயிரிழந்தார். உயிரிழந்த 13 பேரின் உடல்களும், தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, 13 பேரின் உடல்களும், இறுதி சடங்கிற்காக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, பிரதீப்பின் உடல் தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடலுடன் ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனும் உடன் பயணித்தார்.

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ, சூலூர் வட்டாட்சியர் சகுந்தலா மணி ஆகியோர் உடலை திருச்சூர் அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்த பாலக்காடு மக்களவை தொகுதி உறுப்பினர் பிரதாபன், உடலை திருச்சூர் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக - கேரள எல்லையான வாளையாறு பகுதியில், கேரள மாநில நில வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் உடலை பெற்றுக்கொண்டு திருச்சூர் கொண்டு செல்ல உள்ளனர். அங்கு அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.



சூலூர் விமானப்படை தளத்திலிருந்து மலர்களால் அலங்கரிப்பட்ட அமரர் ஊர்தி கொண்டு வரப்பட்ட பிரதீப்பின் உடலுக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த பிரதீப்பிற்கு மனைவி, 7 வயது மகன், இரண்டரை வயது மகள் ஆகியோர் உள்ளனர். பிரதீப்பின் தந்தை கடந்த சில நாட்களாகவே உடல் நலக்கோளாறால் பிராணவாயு உதவியுடன் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...