மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.


கோவை: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் நடத்திய அதிரடி சோதனையில், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே விற்பனைக்கு வைத்திருந்த நெல்லித்துறை பஞ்சாயத்து பர்லிக்காடு பர்லியைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரபு(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...