பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய கூடுதல் ரோபோக்கள் வாங்குவது குறித்து கோவை மாநகராட்சி திட்டம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்யும் பணியில் 6 ரோபோக்களை பயன்படுத்தி வரும் நிலையில், கூடுதலாகத் தேவைக்கு ஏற்ப ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கோவை: பாதாளச் சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்யக் கூடுதல் ரோபோக்கள் வாங்குவது குறித்து கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்யும் பணியில் 6 ரோபோக்களை பயன்படுத்தி வரும் நிலையில், கூடுதலாகத் தேவைக்கு ஏற்ப ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 100வார்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 600 கி.மீ. தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனிதக் கழிவுகளை அகற்றவும் தனியார் நிறுவனத்தினரால் ரோபோ இயந்திரம் தயாரிக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள முதல் ரோபோ இயந்திரம் தனியார் நிறுவனத்தினரால் கொள்முதல் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இந்த ரோபோ இயந்திரம் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. இதனிடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ.2.12 கோடியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக 5 நவீன ரோபோக்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன.

தற்போது இந்த ரோபோக்கள் அனைத்தும் தங்களது பணிகளை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றன. இதனிடையே கூடுதலாக தேவைக்கு ஏற்ப ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது; பாதாள சாக்கடை அடைப்புகளை எதிர்பார்த்த அளவு ரோபோக்கள் சுத்தம் செய்து வருகின்றன. மேலும் மழை காலங்களில் இந்த ரோபோக்களால் மிகவும் எளிதாக சாக்கடைகளை சுத்தம் செய்ய முடிகிறது.

எனவே கூடுதலாக தேவைக்கு ஏற்ப ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு விரைவில் மேற்கொண்டு எவ்வுளவு ரோப்போக்கள் தேவைப்படும் என அறிக்கை அளிக்கப்படும் என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...