9-ம் வகுப்பு மாணவிக்கு கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தநிலையில், திருமணம் செய்த வாலிபர் மீது குழந்தைத் திருமணச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கோவை: 9-ம் வகுப்பு மாணவிக்கு கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தநிலையில், திருமணம் செய்த வாலிபர் மீது குழந்தைத் திருமணச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 25, இருக்கும் உறவினரான கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15-வயது மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இவர்கள் காதலிக்கத் தொடங்கினர். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் எதிர்ப்பையும் மீறி அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பீளமேடு பகுதியிலேயே தனியாக வாடகை வீடு எடுத்துத் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் குழந்தை பிறந்தது. 15-வயது மாணவிக்கு குழந்தை பிறந்தது பற்றி மருத்துவமனை ஊழியர்கள் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து குரு மணிகண்டன் மீது குழந்தைத் திருமணச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாகக் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.