அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

இனிவரும் காலங்களில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை: இனிவரும் காலங்களில் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 71-மாற்றுத் திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்காகப் பணி நியமன ஆணையை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்காகப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நாளை முதல் கோவை மாவட்டத்தில் வீடுகள் வாரியாக மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்துக் கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாகத் தெரிவித்த அவர் கணக்கெடுப்பின் பொழுது மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேவைகளைத் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



விமான நிலைய விரிவாக்கத்திற்குக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களிடம் அவர்களுக்குத் தேவையான கோரிக்கைகள் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியது குறித்தான கேள்விக்குப் பதிலளித்த அவர், அதிமுகவினர் அவர்களுடன் பயணித்தவர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும், ஒருவருக்குத் தோல்வி பயம் ஏற்படும்போது தான் கோபம் வரும் எனவும், அந்த நிலையில் தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் அவர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அரசு மதுபானக் கடைகளைப் பொறுத்தவரை மக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் 134 பணியாளர்கள் தற்போது வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள மின்சார திருத்த மசோதாவிற்குத் தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இந்த சட்டம் விவசாயிகளுக்கு ஒரு கேள்விக் குறியான சட்டம் என முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதி இருப்பதாகத் தெரிவித்த அவர் இனி நடக்க இருப்பதைப் பொறுத்திருந்து காண வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...